எலிபேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை
எலிபேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை
எலிபேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை
ADDED : ஜூன் 27, 2024 11:13 PM
புதுச்சேரி: எலிபேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாண்டார் கோவில், பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்தாஸ் மனைவி பிரேமா ஜெயதுன்பீலி, 27. இவர்களுக்கு யஷ்வந்து என்ற மகன் உள்ளார். அருள்தாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், பிரேமா ஜெயதுன்பீலி வளவனுார் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் முதல் மகன் யஷ்வந்த், அவரது பாட்டி வீடான உறுவையாறு பகுதியில் வசிக்கும் அருள்தாசின் தாய் கோவிந்தம்மாள் வீட்டில் வசித்து வந்தார். பிரேமா யஷ்வந்தை வாரத்தில் ஒரு முறை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.
பிரேமா கடந்த 22ம் தேதி உறுவையாறில் உள்ள மகனை பார்க்க சென்றார். அங்கு கோவிந்தம்மாள் நீ வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு எதற்கு என் பேரனை பார்க்க வருகிறாய் என கேட்டார். மனமுடைந்த பிரேமா எலிபேஸ்ட் வாங்கி சாப்பிட்டு விட்டு, மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.