Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

ADDED : ஜூன் 02, 2024 04:58 AM


Google News
நகர பகுதியில் வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளில் பெட்ரோல் திருடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்காக மாத வருமானத்தில் கணிசமான தொகையை செலவு செய்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியின் பல இடங்களில் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

நள்ளிரவில், வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டு இருக்கும் பைக்குகளில் பெட்ரோலை திருடும் கும்பல், தாங்கள் வைத்திருக்கும் டியூப் பொருத்தப்பட்ட வாட்டர் கேனில் நிரப்பிக் கொண்டு செல்கின்றனர்.

இதேபோல் ஒவ்வொரு சாலையாக பைக்குகளில் சுற்றும் கும்பல் எவ்வளவு பெட்ரோல் பைக்குகளில் கிடைக்கிறதோ, அனைத்தையும் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். தெரு நாய்கள் இல்லாத சாலைகள் பெட்ரோல் திருட்டு கும்பலின் டார்கெட்டாக உள்ளது.

ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பெட்ரோலுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுப்பதா என பொதுமக்கள் தயக்கம் காட்டுவது பெட்ரோல் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் திருடும் சம்பவங்கள் நள்ளிரவு 12 மணியை தாண்டிய நேரங்களில் தான் பெரும்பாலும் நடக்கிறது. முன்பெல்லாம் நள்ளிரவில் வீதிகளில் சுற்றி திரிபவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து எச்சரித்து அனுப்பவர்.

இப்போது, ரோந்து போலீசார் கண்ணில் படுவதும் இல்லை. யாரையும் பிடித்து விசாரிப்பதும் இல்லை.

இது, பெட்ரோல் திருடும் கும்பலுக்கு வசதியாக போய் விடுகிறது.

இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினால் பெட்ரோல் திருட்டை மட்டுமல்லாமல், பெரும்பாலான குற்றங்களையும் தடுத்து நிறுத்த முடியும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us