ADDED : ஜூன் 16, 2024 11:53 PM

புதுச்சேரி: நீண்ட நேரம் மொபைல் போன் பார்ப்பதை கணவர் கண்டித்ததால், வீட்டிலிருந்து மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை, அசோக் நகர், கவிக்குயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன்; தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ரூபி, 50. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். ரூபி மொபைல்போனில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் பார்ப்பதால், கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 13ம் தேதி இரவும் மொபைல்போன் பார்ப்பது குறித்து கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மறுநாள் 14ம் தேதி காலை வழக்கம்போல் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு, சரவணன் அலுவலகம் சென்று விட்டார். மதியம் வீட்டிற்கு வந்தபோது ரூபியை காணவில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து சரவணன் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து ரூபியை தேடி வருகின்றனர்.