Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிருக்கு அறிவிக்கப்பட்ட 'பிங்க் பஸ ் ' திட்டம் என்ன ஆனது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேள்வி 

மகளிருக்கு அறிவிக்கப்பட்ட 'பிங்க் பஸ ் ' திட்டம் என்ன ஆனது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேள்வி 

மகளிருக்கு அறிவிக்கப்பட்ட 'பிங்க் பஸ ் ' திட்டம் என்ன ஆனது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேள்வி 

மகளிருக்கு அறிவிக்கப்பட்ட 'பிங்க் பஸ ் ' திட்டம் என்ன ஆனது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேள்வி 

ADDED : ஆக 07, 2024 05:29 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரிக்கு இரட்டை இன்ஜின் ஆட்சி தேவையில்லையென அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார்.

பட்ஜெட் உரை மீது அவர், பேசியதாவது:

சென்ற ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் இப்போது இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார். இப்படி தாக்கல் செய்தால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும்.

கடந்த பிப்ரவரி மாதமே திட்ட குழுவினை கூட்டி முழு பட்ஜெட்டினை முதல்வர் தாக்கல் செய்திருக்க வேண்டும். 2047ல் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என, பிரதமர் கருதினால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

அதிகாரத்தை வழங்காமல், நிதி கமிஷனில் சேர்க்காமல் எப்படி வளர்ச்சி அடைந்த மாநிலமாக புதுச்சேரி மாற முடியும். 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய மாநிலத்தின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய மனமில்லை.

அப்புறம் எதற்கு இரட்டை இன்ஜின் ஆட்சி. இனி புதுச்சேரிக்கு ஒற்றை இன்ஜின் ஆட்சியே போதும்.

ஜி.எஸ்.டி., இழப்பீட்டினை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும்.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாததால், எந்த கூட்டுறவு சங்கத்திலும் கடன் பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட மகளிருக்கு பிங்க் கலர் பஸ் திட்டம் என்ன ஆனது. மக்களுக்கு அதிகாரத்தை அளிக்க உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் இன மக்களுக்கு சரியில்லாத பட்ஜெட்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us