/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட கடைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட கடைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட கடைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட கடைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட கடைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 18, 2024 11:10 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடைகள், நிறுவனங்களில் பயன்படுத்தும் சாதாரண மற்றும் மின்னணு எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட்டு புதுப்பித்து கொள்ள வேண்டும் என, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பயன்படுத்தும் தராசுகள், எடைக்கற்களுக்கு முத்திரைக்கட்டணத்தை உரிமையாளர்கள், தட்டாஞ்சாவடியில் இயங்கும் சட்டமுறை எடையளவை துறையில் செலுத்தி, புதுப்பிக்க வேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரி கடைகள், தங்களது சொந்த தயாரிப்புகளை உறையிட்டு விற்பனை செய்யும் போது, அதில் விலாசம், உறையிட்ட தேதி, முதிர்வு தேதி, எடை அளவு மற்றும் விலை விபரம் அச்சிட வேண்டும்.
சொந்தமாக தயாரித்து உறையிட்டு விற்பனை செய்யும் பதிவு சான்று பெறாத நிறுவனங்கள், வணிகர்கள் துறை அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அதற்குண்டான பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்வது உறையிலிட்டு விற்பனை செய்யும் பொருட்களின் சட்ட விதி, 2011,ன், படி அவசியம்.
இன்னும் ஒரு மாத காலக்கெடுவுக்குள் பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்வது கட்டாயம்.கடைகள், நிறுவனங்களில் பயன்படுத்தும் சாதாரண மற்றும் மின்னணு எடை தராசுகள், கற்களுக்கு முத்திரையிட்டு புதுப்பித்து கொள்ள வேண்டும்.
தவறினால், சட்டமுறை எடையளவுத்துறை அதிகாரிகளால், கள ஆய்வு செய்து, தராசுகளை சட்ட அளவீட்டு அமலாக்க விதி, 2011 மற்றும் உறையில் இட்டு விற்பனை செய்யும் பொருட்களின் சட்டம், 2011, ஆகியவைகளின் படி, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், தட்டாஞ்சாவடியில் உள்ள, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை, நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள் 0413-2252847, 2253462 மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.