ADDED : ஜூன் 03, 2024 04:52 AM

புதுச்சேரி : மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.
புதுச்சேரி கைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான சீனியர் பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாண்டி மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் துவங்கியது.
இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில் புதுச்சேரி மாநிலம் முழுதும் இருந்து 20க்கும் மேற்பட்ட மகளிர் அணிகள், 46 ஆண்கள் அணியினர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பாண்டி மெரினா கடற்கரையில் நடந்தது.
விழாவில், புதுச்சேரி கைப்பந்து கழகத் தலைவர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.
ஏற்பாடுகளை கைப்பந்து சங்கத் துணை தலைவர் முத்துகேசவலு , நடுவர் குழு சேர்மன் ராஜவேலு, சீனியர் பயிற்சியாளர் சண்முகம், பொறுப்பாளர்கள் தணிகைகுமரன், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.