/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரெஸ்டோ பார்களை மூட அரசுக்கு வலியுறுத்தல் ரெஸ்டோ பார்களை மூட அரசுக்கு வலியுறுத்தல்
ரெஸ்டோ பார்களை மூட அரசுக்கு வலியுறுத்தல்
ரெஸ்டோ பார்களை மூட அரசுக்கு வலியுறுத்தல்
ரெஸ்டோ பார்களை மூட அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 19, 2024 05:22 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வேண்டும் என அகில பாரதிய வித்யார்த் பரிஷித் அரசை வலியுறுத்தியுள்ளது.
மாநில இணை செயலாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் கலால்துறை மூலம் லைசன்ஸ் வாங்கி 209 ரெஸ்டோபார்கள் இயங்கி வருகிறது.
பார்களை நடத்துபவர்கள் கலால் துறை விதிமுறைகளை பின்பற்றபடுவதில்லை. கிராம பகுதிகளில் இருக்கும் இந்த பார்கள் மூலம் கலசார சீர்கேடு நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களின் வாழ்க்கை தடம் மாறி வருகிறது. புதுச்சேரி கஞ்சா நகரமாக மாறிவருகிறது. இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி ரெஸ்டோபார்களை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.