/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவில் வித்வான் தட்சிணாமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தவில் வித்வான் தட்சிணாமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
தவில் வித்வான் தட்சிணாமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
தவில் வித்வான் தட்சிணாமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
தவில் வித்வான் தட்சிணாமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ADDED : மார் 14, 2025 04:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்கம் சார்பில் பத்மஸ்ரீ விருதாளர் தவில் வித்வான் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தியை பாராட்டினார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மத்தியமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி குழுவினருடன் மேடையில் அமர்ந்து, 'ஓம்நமச்சிவாய' என்ற பக்தி பாடலை பாடினார். இதனை விழாவுக்கு வந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக மத்தியஅமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை திட்டம் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளது.
அதன்படி அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணை மொழியில் தமிழும் ஒன்று. தமிழ் மொழி ஒரு செம்மொழியாகும். அதனை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.