/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய இணை அமைச்சர் ரயில் நிலையத்தில் ஆய்வு மத்திய இணை அமைச்சர் ரயில் நிலையத்தில் ஆய்வு
மத்திய இணை அமைச்சர் ரயில் நிலையத்தில் ஆய்வு
மத்திய இணை அமைச்சர் ரயில் நிலையத்தில் ஆய்வு
மத்திய இணை அமைச்சர் ரயில் நிலையத்தில் ஆய்வு
ADDED : ஜூலை 29, 2024 05:43 AM

புதுச்சேரி, : புதுச்சேரி ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, நேற்று ஆய்வு செய்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாடு மற்றும் புதுப்பிக்கும் பணிகளின் வரைபடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, சி.சி.டி.வி அறை மற்றும் ரயில் நிலையம் முழுவதும் சுற்றி பார்த்தார்.
ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டவர், ஊனமுற்றோர் மற்றும் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடைகளை ஒதுக்கித்தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., தென்னக ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிேஷார், தலைமை கணக்கு அதிகாரி அமித்குமார் மன்வால், திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அமைச்சர் சோமண்ணா கூறுகையில், 'புதுச்சேரி வரலாற்று சிறப்பு மிக்க நகரம். 140 ஆண்டுகள் பழமையான புதுச்சேரி ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மாற்றுவதற்காக ரூ.93 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன. ஓராண்டிற்குள்பணிகள் முடிவடையும். புதுச்சேரி ரயில் நிலையத்தை துாய்மையாக வைத்திருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.