ADDED : ஜூலை 20, 2024 04:41 AM
அரியாங்குப்பம்: அதிகமாக மது குடித்து கட்டிலில் இருந்து கீழே விழுந்து டைலர் இறந்தார்.
மணவெளியை சேர்ந்தவர் பழனியப்பன், 4௬; டைலர். இவர் மனைவியை விட்டு பிரிந்து, அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வருகின்றார். இவருக்கு குடிக்கும் பழக்கம் உள்ளதால் நேற்று அவர் அதிகளவில் மது குடித்துவிட்டு, வீட்டில் படுத்திருந்த போது கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில், அரியாங் குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.