ADDED : ஜூன் 01, 2024 04:05 AM
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
பெரிய காலப்பட்டு ஜெயா தியேட்டர் எதிரில் மது குடித்துவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்ட பெரியகாலப்பட்டு, முருகன் கோவில் தெரு முருகன், 37, சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாறன், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.