/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில்வே கேட்டில் லாரி மோதல் மின் கேபிள் துண்டிப்பு: ரயில்கள் தாமதம் நான்கு ரயில்கள் தாமதமாக சென்றன ரயில்வே கேட்டில் லாரி மோதல் மின் கேபிள் துண்டிப்பு: ரயில்கள் தாமதம் நான்கு ரயில்கள் தாமதமாக சென்றன
ரயில்வே கேட்டில் லாரி மோதல் மின் கேபிள் துண்டிப்பு: ரயில்கள் தாமதம் நான்கு ரயில்கள் தாமதமாக சென்றன
ரயில்வே கேட்டில் லாரி மோதல் மின் கேபிள் துண்டிப்பு: ரயில்கள் தாமதம் நான்கு ரயில்கள் தாமதமாக சென்றன
ரயில்வே கேட்டில் லாரி மோதல் மின் கேபிள் துண்டிப்பு: ரயில்கள் தாமதம் நான்கு ரயில்கள் தாமதமாக சென்றன
ADDED : ஜூன் 11, 2024 05:30 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே ரயில்வே கேட் மீது லாரி மோதிய விபத்தில் ரயில்பாதை மின்சாரம் துண்டிக்கப்பட்டாதல் ரயில்கள் தாமதமாக சென்றன.
புதுச்சேரி அடுத்த ஒதியம்பட்டில் உள்ள நித்யா பேக்கேஜிங் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி நேற்று காலை 7:30 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. கண்டமங்கலம் அடுத்த பள்ளிநேலியனுார் அருகே எதிரே வந்த வாகனத்தை கடந்து சென்றபோது, திறந்திருந்த ரயில்வே கேட்டில் மோதியது.
அதில் கேட்டின் இரும்பு குழாய் ரயில்பாதைக்கு மேலே சென்ற மின்கம்பியில் மோதியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து தென்னக ரயில்வே பொறியியல் பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரத்திற்கு பின் மின்பாதையை சீரமைத்தனர்.
இதனால் காலை 8.05 மணிக்கு செல்ல வேண்டிய புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் ரயில் 9.45 மணிக்கும், காலை 8.05 மணிக்கு செல்ல வேண்டிய சென்னை -புதுச்சேரி பயணிகள் ரயில் 10.10 மணிக்கும், 9.05 மணிக்கு செல்ல வேண்டிய மங்களூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் 9.40 மணிக்கும், காலை 9.40 மணிக்கு செல்ல வேண்டிய சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரயில் காலை 11.00 மணிக்கும் காலதாமதமாக சென்றன.