ADDED : மார் 15, 2025 06:15 AM

புதுச்சேரி: உழந்தைகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், விளையாட்டு தின விழா, ஆண்டு விழா மற்றும் மழலை யருக்கான பட்டமளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.
பெண் கல்வி துணை இயக்குனர் சிவராம ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.