/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் சுழன்றடித்த சூறாவளியில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன புதுச்சேரியில் சுழன்றடித்த சூறாவளியில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன
புதுச்சேரியில் சுழன்றடித்த சூறாவளியில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன
புதுச்சேரியில் சுழன்றடித்த சூறாவளியில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன
புதுச்சேரியில் சுழன்றடித்த சூறாவளியில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன
ADDED : ஜூலை 19, 2024 04:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு மணி நேரம் சுழன்றடித்த சூறாவாளி கனமழையால், பல்வேறு இடங்களில் மரங்கள் அடியோடு விழுந்து மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று மாலை 5.10 மணியளவில் வழக்கத்திற்கு மாறாக கருங்மேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீரென பலத்த சூறாவளியுடன் மழை கொட்டியது.
திடீர் சூறாவளி காற்றை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் அருகில் இருந்த கடைகளில் தஞ்சம் புகுந்தன.
சூறாவளி காற்றினால் வீடுகள், தொழிற்சாலைகளில் மொட்டை மாடிகளில் இருந்த ஷீட்கள் காற்றில் பறந்தன.
நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மரங்கள் மட்டுமின்றி பல இடங்களில் மின்மாற்றிகள், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களிலும் விழுந்து நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மின் துறை ஊழியர்களும், தீயணைப்பு, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணி துறை ஊழியர்கள், களம் இறக்கி, விழுந்த மரங்களை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டது. இருப்பினும் நகரம், கிராமபுறங்களில் மின்சாரம் தடைபட்டு, பல மணி நேரம் இருளில் மூழ்கின.
உயிர் தப்பிய டாக்டர்கள்
லாஸ்பேட்டை ஜீவா காலனி பஸ் ஸ்டாப்பில் மகாத்மா காந்தி மருத்துவமனை பஸ், டாக்டர்களை இறக்கிவிட நின்றது. திடீரென வீசிய சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அங்கு நுாலகம் அருகில் இருந்த 18 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொன்றை மரமும், அதன் அருகில் இருந்த ைஹமாஸ் கம்பம் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் ஒயருடன் பஸ் மீது விழுந்தது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பஸ் டிரைவர் மண்ணாங்கட்டி, பஸ்ஸில் இருந்த எட்டு டாக்டர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வெளியேறினர். தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி எடுத்து பஸ்சை அப்புறப்படுத்தினர்.-
அச்சுறுத்திய கண்ணாடி
சூறாவளி காற்றினால் மிஷன் வீதியில் உள்ள ஐந்து மாடி தனியார் தங்கும் விடுதி கண்ணாடி பொதுமக்கள் மீது விழும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கண்ணாடியை அகற்றினர்
போக்குவரத்து பாதிப்பு
ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள் விழுந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜீவா காலணி இதயா கல்லுாரி,தாவரவியல் பூங்கா உழவர்சந்தை, சுப்பையா நகர் துமாஸ் வீதி, மதகடிகப்பட்டு-கரியமாணிக்கம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பெரிய மரங்கள் விழுந்தததால் வீடுகளுக்கு மாற்று வழிகளில்வாகன ஓட்டிகள் புகுந்து சென்றனர்.
தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் வாயிலில் இருந்த கொன்றை மரம் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மரங்கள் விழுந்து ஒரே நேரத்தில் மின்சாரமும் தடைபட்டதால் தீயணைப்பு வீரர்களுடன் பொதுமக்கள் கத்திகளுடன் நேரடியாக களம் இறங்கி கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். அந்தந்த பகுதிகளில் அரசியல் கட்சியினரும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.