sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவர்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவர்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவர்களுக்கு பயிற்சி


ADDED : மே 11, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 08:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. 

புதுச்சேரியில் 2026ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த கணக்கெடுப்பில் வீட்டின் அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் ஏரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.  

இப்பணியில் ஈடுபட 439 கணக்கெடுப்பாளர்கள், 74 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி, பள்ளி கல்வித்துறை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி ஆகிய இடங்களில் மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நேற்று(11ம் தேதி) துவங்கி நாளை(13ம் தேதி) வரை நடக்கிறது. இதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகின்றனர். 

தொடர்ந்து, 2ம் கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 18 ம் தேதி வரையிலும், 3ம் கட்டமாக 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. பயிற்சி வகுப்பு கலந்து கொள்பவர்களை சம்பந்தப்பட்ட துறைகள் விடுவிக்க வேண்டும் என துணை கலெக்டர் தயானந்த் டெண்டுல்கர் உத்தரவிட்டுள்ளார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us