sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மே 12, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 10:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேசிய கோரிக்கை நாளையொட்டி, புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட இந்தியா மற்றும் மத்திய தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் எல்.எல்.எப்., மாநில துணைத் தலைவர் கலைவண்ணன், ஏ.ஐ.சி.சி.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். இந்திய தொழிலாளர் மாநாடு அவசரமாக கூட்டப்பட வேண்டும். மாதத்திற்கு ரூ. 26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். எல்.பி.ஜி., (சமையல் காஸ்) மலிவு விலையில் கிடைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, எல்.எல்.எப்., மாநில செயலாளர் கார்முகில் ஏ.ஐ.சி.சி.டி.யூ., அகில இந்திய துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us