/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறையில் இருந்து பணம் கேட்டு மிரட்டல் மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் மூவர் கைது சிறையில் இருந்து பணம் கேட்டு மிரட்டல் மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் மூவர் கைது
சிறையில் இருந்து பணம் கேட்டு மிரட்டல் மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் மூவர் கைது
சிறையில் இருந்து பணம் கேட்டு மிரட்டல் மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் மூவர் கைது
சிறையில் இருந்து பணம் கேட்டு மிரட்டல் மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் மூவர் கைது
ADDED : ஜூலை 20, 2024 04:32 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி தெஸ்தான் உறவினரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சிறையில் உள்ள ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் மூவரை போலீசார் கைது செய்து ரூ. 1.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது, உழவர்கரை அரசு பள்ளி அருகே ரவுடி தெஸ்தான் உறவினரான விமல் வீட்டின் அருகே நின்றிருந்த பெண்களிடம் வாலிபர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.
விசாரணையில், தெஸ்தான் உறவினரான விமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சமீபத்தில் உழவர்கரை பள்ளிக்கு பின் உள்ள இடத்தை விற்று கொடுத்ததில் விமலுக்கு பணம் வந்துள்ளது.அந்த பணத்தில் பங்கு கேட்டு, சிறையில் உள்ள மர்டர் மணிகண்டன், மொபைல் போனில் விமலை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். ஆனால், விமல் பணம் தரவில்லை. இதனால், மர்டர் மணிகண்டன் தனது கூட்டாளிகளை விமல் வீட்டிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.
பணம் கேட்டு மிரட்டிய மர்டர் மணிகண்டன் மனைவி பத்மாவதியின் உறவினர் நோணாங்குப்பம், பள்ளிகூட வீதி ரஞ்சித்குமார், 33; பூமியான்பேட்டை பவாணர் நகர், பிரகாஷ்குமார், 28; வாணரப்பேட்டை, பிரான்சுவா தோப்பு, ரவுடி ஜெரால்டு, 44; ஆகியோரை வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டர், தினசரி மாமூல் வசூல் பணம் ரூ. 1,70 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சிறையில் உள்ள கைதி பெருமாள்ராஜா உள்ளிட்ட கைதிகள் பெயரில் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு எழுதிய 20 கடிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் அளித்த வாக்குமூலத்தின்படி, மிரட்டி பணம் வசூல் செய்த வழக்கில் சிறையில் உள்ள ரவுடி மர்டர் மணிகண்டன், வெளியில் உள்ள அவரது மனைவி திருபுவனை பத்மாவதியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய ஷார்ப் விக்கி, மோகன்ராஜ், பைரவா ஆகியோரை தேடி வருகின்றனர்.