Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வைத்திக்குப்பத்தில் மாசி மக தீர்த்தவாரி கவர்னர் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைத்திக்குப்பத்தில் மாசி மக தீர்த்தவாரி கவர்னர் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைத்திக்குப்பத்தில் மாசி மக தீர்த்தவாரி கவர்னர் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைத்திக்குப்பத்தில் மாசி மக தீர்த்தவாரி கவர்னர் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

ADDED : மார் 15, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில், கவர்னர், அமைச்சர் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

வைத்திக்குப்பம் கடற்கரை மாசி மக தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் முருகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனுார் அங்காளம்மன் உற்சவ சுவாமிகள் ஊர்வலமாக வந்தனர். கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், காளத்தீஸ்வரர், கவுசிக பாலசுப்ரமணியர் உட்பட புதுச்சேரி மற்றும் தமிழகம் பகுதிகளை சேர்ந்த சுவாமிகள் தீர்த்தவாரியில் எழுந்தருளினர்.

கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். பொதுமக்கள் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை புதுச்சேரி நகராட்சி செய்திருந்தது.

வீராம்பட்டினம்


வீராம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில், அரியாங்குப்பம், தவளக்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட கோவில்களின் சுவாமிகள் எழுந்தருளின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us