/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,- ௸-- என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல் இல்லை பா.ஜ.,- ௸-- என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல் இல்லை
பா.ஜ.,- ௸-- என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல் இல்லை
பா.ஜ.,- ௸-- என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல் இல்லை
பா.ஜ.,- ௸-- என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல் இல்லை
ADDED : ஜூன் 25, 2024 05:16 AM
அமைச்சர் நமச்சிவாயம் ஆவேச பதில்
புதுச்சேரி, ஜூன் 25-
பா.ஜ.,-என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல் இல்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி தாகூர் அரசு கலைக்கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
மின்சாரம் வாங்கும் இடத்தில் கட்டணம் உயர்ந்துள்ளது.மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
மத்திய மின்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளோம். ரூ. 148 கோடி பற்றாக்குறை வருகிறது. மானியம் மூலம் சரிசெய்ய யோசனை உள்ளது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
பா.ஜ.,-என்.ஆர்.,காங்., கூட்டணியில் விரிசல் இல்லை. தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு புதுச்சேரி தலைவர் ரங்கசாமிதான். அமைச்சர், கவர்னர் சந்திப்பு பொதுவான விஷயம்தான். எங்களுக்குள் விரிசல் இல்லை.
கவர்னர்தான் செயல்படுகிறார் முதல்வர் செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யப்பார்க்கின்றனர். பொய்யை தொடர்ந்து சொல்லி உண்மையாக்கி வெற்றி அடைந்துள்ளனர்.
மக்களால் தேர்வான அரசைவிட கவர்னருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் சென்று வாங்கிக்கொடுத்தவர் நாராயணசாமிதான். பாப்ஸ்கோ, பாசிக் திறக்க முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.
இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த கவர்னரிடம் இருமுறை முதல்வர் பேசியுள்ளார். மக்களுக்கு பணமாக ஆண்டுக்கு ரூ. 48 கோடி தருகிறோம்.
அதற்கு பதிலாக அரிசியை பெற விரும்புகிறார்கள். அதையும் முதல்வர் செய்வதாக உத்தரவாதம் தந்துள்ளார்.
கவர்னரும் இதை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். பழைய சிக்னல்களை புதிதாக 34 சிக்னல்களை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி தரக்கோரி மத்திய நிதியமைச்சரை பா.ஜ., சார்பிலும் சந்திக்கவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.