Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயக்கடைகளை சரண்டர் செய்ய கலால் துணை ஆணையரிடம் மனு உரிமையாளர்கள் செயலால் புதுச்சேரியில் பரபரப்பு

சாராயக்கடைகளை சரண்டர் செய்ய கலால் துணை ஆணையரிடம் மனு உரிமையாளர்கள் செயலால் புதுச்சேரியில் பரபரப்பு

சாராயக்கடைகளை சரண்டர் செய்ய கலால் துணை ஆணையரிடம் மனு உரிமையாளர்கள் செயலால் புதுச்சேரியில் பரபரப்பு

சாராயக்கடைகளை சரண்டர் செய்ய கலால் துணை ஆணையரிடம் மனு உரிமையாளர்கள் செயலால் புதுச்சேரியில் பரபரப்பு

ADDED : ஜூலை 20, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: போலீசாரை கண்டித்து சாராயக்கடை உரிமையா ளர்கள், தங்கள் கடைகளின் உரிமத்தை கலால் துணை ஆணையரிடம் சரண்டர் செய்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி மேற்கு எஸ்.பி., அலுவலகத்தில் சாராயக்கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமை தாங்கினார்.மேற்கு சரகத்திற்கு உட்பட்ட சாராயக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். உரிமையாளர்கள் அமர இருக்கை ஏற்பாடு செய்யவில்லை. நிற்க வைத்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேலும், அளவுக்கு அதிகமாக சாராயம் விற்றாலும், இரவு 10:00 மணியை தாண்டி விற்பனை நடந்தாலும்,தமிழகத்திற்கு யாரேனும் சாராயம் கடத்தி சென்று அங்கு வழக்கில் சிக்கினால், அவர்களுக்கு சாராயம் விற்ற கடை உரிமையாளர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்வோம் என எச்சரித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த சாராயக்கடை உரிமையாளர்கள் நேற்று மதியம் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் சந்தித்தனர். அப்போது, அரசு நடத்தும் ஏலத்தில் பங்கேற்று பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்து, முதலீடு செய்து அரசின் விதிமுறைப்படி சாராய விற்பனை செய்கிறோம்.

ஆனால், போலீசார் எங்களை குற்றவாளிகள் போல் நடத்துவதை கண்டித்து சாராயக்கடை லைசன்ஸ்களை சரண்டர் செய்வதாக கடிதம் வழங்கினர்.

கற்பக விநாயகர் கள்ளுக்கடை, சாராயக்கடை உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில்; கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அதற்கும் புதுச்சேரியில் அரசு சார்பில் சாராயம், கள்ளு கடை நடத்துவோருக்குஎந்தவித சம்பந்தம் இல்லை. அரசு வழங்கும் சாராயம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தமிழகத்திற்கு சாராயம் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கவில்லை. ஆனால், அனைத்து சாராய வியாபாரிகளையும் அழைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என போலீசார் மிரட்டுகின்றனர். அதனால், சாராயக்கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அனைத்து சாராயக்கடை லைசன்ஸ்களை சரண்டர் செய்கிறோம் என கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us