ADDED : ஆக 03, 2024 11:49 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ேஹாமியோபதி பிரிவு துவக்கப்படும் என, அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு நன்றி தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய ஆயுஷ் திட்டத்தின் நிதி உதவியுடன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஹோமியோபதி மருத்துவ பிரிவு மற்றும் மருந்தகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அவருக்கு புதுச்சேரி பல்கலைகழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இதன்மூலம் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள காலாப்பட்டு பகுதி மக்களும் பயனடைவர்.
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் ரங்கசாமிக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துகள்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.