ADDED : ஜூலை 23, 2024 02:25 AM
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மேம்பாலம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட பொம்பூர் மயிலம் பாதையை சேர்ந்த ரமேஷ், 29; என்பவரை போலீசார் கைது செய்தனர்.