/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்கூட்டியில் இருந்த ரூ. 5 லட்சம் 'அபேஸ்' ஸ்கூட்டியில் இருந்த ரூ. 5 லட்சம் 'அபேஸ்'
ஸ்கூட்டியில் இருந்த ரூ. 5 லட்சம் 'அபேஸ்'
ஸ்கூட்டியில் இருந்த ரூ. 5 லட்சம் 'அபேஸ்'
ஸ்கூட்டியில் இருந்த ரூ. 5 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 26, 2024 02:58 AM
புதுச்சேரி, : ஸ்கூட்டி டிக்கியில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட், பி.எஸ்.சி., வங்கி காலனியைச் சேர்ந்தவர் மதியழகன், 60. இவர் கடந்த 15ம் தேதி காலை 11:00 மணியளவில், அரியாங்குப்பம் சிட்டி யூனியன் வங்கியில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுத்து, அவரது ஸ்கூட்டி (பி.ஒய்.05.பி.1042) டிக்கியில் வைத்துக் கொண்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
சுதான நகர் ஆர்ச் அருகில் உள்ள ஒரு கடையில் ஜெராக்ஸ் எடுப்பதற்கு வண்டியை கடை எதிரில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து வண்டியின் டிக்கியை திறந்து பார்த்த போது அதிலிருந்த 5 லட்சம் ரூபாயை காணவில்லை.
இதுகுறித்து அவர், நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.