/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி புதிய கவர்னர் இன்று பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் புதுச்சேரி புதிய கவர்னர் இன்று பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
புதுச்சேரி புதிய கவர்னர் இன்று பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
புதுச்சேரி புதிய கவர்னர் இன்று பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
புதுச்சேரி புதிய கவர்னர் இன்று பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
ADDED : ஆக 07, 2024 01:37 AM

புதுச்சேரி:புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாஷ்நாதன் இன்று பதவியேற்கிறார்.
புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஜூலை 27ல் புதுச்சேரியின் புதிய கவர்னராக கைலாஷ்நாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். அவர், நேற்று மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரி வந்தார்.
அவரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சாய்சரவணன்குமார், திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்றனர்.
புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா இன்று காலை 11:15 மணிக்கு ராஜ்நிவாசில் நடக்கிறது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னர் கைலாஷ் நாதனுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.
தற்போது புதுச்சேரியின் 15வது சட்டசபையின் 5வது பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை 31 முதல் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பதற்காக காலை 11:00 மணிக்கு முன், சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்நிவாசை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.