/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியிடம் விவகாரத்து பெற்றும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தவர் கைது மனைவியிடம் விவகாரத்து பெற்றும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தவர் கைது
மனைவியிடம் விவகாரத்து பெற்றும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தவர் கைது
மனைவியிடம் விவகாரத்து பெற்றும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தவர் கைது
மனைவியிடம் விவகாரத்து பெற்றும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தவர் கைது
ADDED : ஜூலை 08, 2024 04:26 AM
அரியாங்குப்பம்: மனைவியிடம் விவாகரத்து பெற்றும், தொடர்ந்து டார்ச்சர் செய்தவரை போலீசார் மூன்றாவது முறையாக கைது செய்தனர்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கல்யாண்சக்கரவர்த்தி, 39; புதுச்சேரியை சேர்ந்த பெண், 39; புதுச்சேரி அரசு வங்கியில் அதிகாரியாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் நடந்து, 9 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால், 2016ம் ஆண்டு அப்பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், தனது மகளுடன் தனியாக வசித்து வரும் அந்த பெண் வீட்டிற்கு, கல்யாண்சக்கரவர்த்தி அடிக்கடி சென்று அவதுாறாக பேசி, அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். விவாகரத்து வாங்கியும், தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.
இந்நிலையில், அரியாங்குப்பத்தில், குடியிருக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று சென்ற கல்யாண்சக்கரவர்த்தி, அவதுாறாக பேசி தகராறு செய்தார்.
இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கல்யாண்சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
யும் அவர் மீது நடவடிக்கை எடுக்க, அப்பெண் ஏற்கனவே போலீசில் புகார் செய்தார்.
ஏற்கனவே, இதே பிரச்னையில் கல்யாண்சக்கரவர்த்தி மீது ரெட்டியார்பாளையம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இருமுறை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.