/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல் புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
ADDED : ஜூலை 16, 2024 05:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் தினசரி 8 பாட வேளை, பள்ளிகள் இயங்கும் நேர மாற்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரியில் மொத்தம் 416 அரசு பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாட திட்டங்கள், சி.பி.எஸ்.இ., பாட திட்டமாக மாற்றப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி, தினசரி பாட வேளை வகுப்புகள், 7 இல் இருந்து 8 ஆகவும், பள்ளிகள் துவங்கும் நேரமும் மாற்றி கடந்த 9ம் தேதி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
நகர பகுதி அரசு பள்ளிகள் காலை 9:00 மணிக்கு துவங்கி மாலை 3:45 மணிக்கு முடியும். கிராம பகுதி பள்ளிகள் காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை 4:15 மணிக்கு முடியும்.
இந்த இரு வேறு பள்ளி துவங்கும் நேரத்தையும் மாற்றி, அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9:00 மணிக்கு துவங்கி, மாலை 4:20 மணிக்கு முடிக்க வேண்டும்.
தினசரி 7 ஆக இருந்த பாட வேளை வகுப்புகள் 8 ஆக அதிகரிக்கப்பட்டது. இரு இடைவெளி, மதிய உணவு இடைவெளி என புதிய பாடவேளை அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை நேற்று 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு பள்ளிகள் அனைத்தும் நேற்று 9:00 மணிக்கு துவங்கிய மாலை 4:20 மணிக்கு முடிந்தது.