/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜிவ் சதுக்கத்தில் பாலம் அமைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு சூசக பதில்; வைத்திலிங்கம் எம்.பி., தகவல் ராஜிவ் சதுக்கத்தில் பாலம் அமைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு சூசக பதில்; வைத்திலிங்கம் எம்.பி., தகவல்
ராஜிவ் சதுக்கத்தில் பாலம் அமைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு சூசக பதில்; வைத்திலிங்கம் எம்.பி., தகவல்
ராஜிவ் சதுக்கத்தில் பாலம் அமைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு சூசக பதில்; வைத்திலிங்கம் எம்.பி., தகவல்
ராஜிவ் சதுக்கத்தில் பாலம் அமைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு சூசக பதில்; வைத்திலிங்கம் எம்.பி., தகவல்
ADDED : ஜூலை 31, 2024 04:08 AM
புதுச்சேரி : போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகரப்பகுதி தொடர் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருவதால், மேம்பாலங்கள் கட்டுவது, சாலைகளை அகலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ராஜிவ் சதுக்கம் முதல் இந்திரா சதுக்கம் வரை மேம்பாலம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் லோக்சபாவில் மேம்பாலங்கள் குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
அதற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இ.சி.ஆர் காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி - திண்டிவனம் சாலை வழியாக புதுச்சேரி - விழுப்புரம் சாலையை இணைக்கும் புறவழிச் சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்க இருப்பதாக பதில் கூறியுள்ளார்.
இதன் மூலம் ராஜிவ் சதுக்கத்தில் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாது என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். அந்த புறவழிச்சாலை அமைத்தாலும் புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு வில்லை.
எனவே, முதல்வர் ரங்க சாமி விரைவாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் இருந்து மரப்பாலம் வரை மேம்பாலத்தை கட்ட மத்திய அரசின் அனுமதியும், நிதியும் பெற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.