/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் அருகே சந்தன ஆயில் கம்பெனியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை வில்லியனுார் அருகே சந்தன ஆயில் கம்பெனியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
வில்லியனுார் அருகே சந்தன ஆயில் கம்பெனியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
வில்லியனுார் அருகே சந்தன ஆயில் கம்பெனியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
வில்லியனுார் அருகே சந்தன ஆயில் கம்பெனியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
ADDED : ஜூன் 14, 2024 06:11 AM

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தில் வேளாண் அமைச்சர் மகள் பிரேமாவிற்கு சொந்தமான கம்பெனி உள்ளது.
இதனை கேரளா மாநிலத்தை சேர்ந்த நாசர் என்பவர் வாடகைக்கு எடுத்து 'இந்தோ அப்ரோ எஸசன்ஷியல் ஆயில் (பி) லிட்., என்ற கம்பெனியை நடத்தி வருகிறார்.
இங்கு வெளிநாடுகளில் இருந்து சந்தன மரக்கட்டைகள் இறக்குமதி செய்து, அதில் இருந்து எண்ணெய் எடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் பகுதியில் சந்தன கட்டைகள் கடத்தி சென்ற வாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
கேரளாவில் இருந்து புதுச்சேரி உளவாய்க்கால் பகுதியில் உள்ள கம்பெனிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். சந்தன கட்டைகள் கடத்திய 4 பேரை வனத்துறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 டன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சேலம் மாவட்ட வனத்துறை உதவி வன பாதுகாவலர் சுரேஷ் தலைமையில் 8 வன அதிகாரிகள், திண்டி வனம் வனத்துறை அதிகாரி, புதுச்சேரி வனத்துறை அதிகாரிகள் மற்றும் வில்லியனுார் தாசில்தார் சேகர், வில்லியனுார் போலீசார் உள்ளிட்ட 20க் கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு உளவாய்க்காலில் உள்ள சந்தன ஆயில் கம்பெனி குடோனில் வைத்திருந்த சந்தன மரக்கட்டை மூட்டைகளை ஆய்வு செய்தனர்.
இரவு 10:00 மணி வரை நடந்த சோதனையில் 40 கிலோ எடை கொண்ட ஆறு பைகள் கணக்கில் வரமால் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அதற்கான அனைத்து ஆவணங்களையும் இன்று (14ம் தேதி) காலை நேரில் சமர்ப்பிக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் குடோன் மற்றும் மீதமுள்ள சோதனை செய்யாத அறைகளுக்கு புதிய பூட்டு வாங்கி வந்து, பூட்டிவிட்டு, சாவியை எடுத்துச் சென்றனர்.
இன்று (14ம் தேதி) மீண்டும் சந்தன கட்டை இருப்புகளை ஆய்வு செய்ய உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு வில்லியனுார் எஸ்.பி., அலுவலகத்தில் தமிழக வனத்துறை அதிகாரிகள் குழுவினர் கடிதம் கொடுத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.