Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழ்மாமணி விருதுகள் முதல்வர் அறிவிப்பு

தமிழ்மாமணி விருதுகள் முதல்வர் அறிவிப்பு

தமிழ்மாமணி விருதுகள் முதல்வர் அறிவிப்பு

தமிழ்மாமணி விருதுகள் முதல்வர் அறிவிப்பு

ADDED : மார் 13, 2025 06:48 AM


Google News
கலை பண்பாட்டு துறை குறித்த முக்கிய அறிவிப்புகள்:

நலிந்த கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள், கலைமாமணி, தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா, மலையாள ரத்னா விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்மாமணி விருதுகள் தகுதியான கலைஞர்களுக்கு வழங்கப்படும். இலக்கிய சொற்பொழிவாளர்கள், புகைப்படம், திரைப்படம், ஆவணப்படம் ஆகிய துறைகளுக்கும் கலைமாமணி விருது வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும்.

காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள், கலையரங்கம், அருங்காட்சியகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்பு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி பிராந்தியத்தில் இரண்டு அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்படும். புதுச்சேரியில் உள்ள அனைத்து கிளை நுாலகங்களும் பழுது பார்த்து புனரமைக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us