/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எழுத்தாளர் பாரதி வசந்தன் நுாலுக்கு தமிழ் வளர்ச்சி துறை விருது அறிவிப்பு எழுத்தாளர் பாரதி வசந்தன் நுாலுக்கு தமிழ் வளர்ச்சி துறை விருது அறிவிப்பு
எழுத்தாளர் பாரதி வசந்தன் நுாலுக்கு தமிழ் வளர்ச்சி துறை விருது அறிவிப்பு
எழுத்தாளர் பாரதி வசந்தன் நுாலுக்கு தமிழ் வளர்ச்சி துறை விருது அறிவிப்பு
எழுத்தாளர் பாரதி வசந்தன் நுாலுக்கு தமிழ் வளர்ச்சி துறை விருது அறிவிப்பு
ADDED : ஜூலை 11, 2024 06:46 AM

புதுச்சேரி, : புதுச்சேரி எழுத்தாளர் பாரதி வசந்தன் எழுதிய 'பெரிய வாய்க்கா தெரு' என்ற சிறுகதை தொகுப்பு நுாலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 1972 முதல் ஆண்டுதோறும் சிறந்த நுால்களை தேர்வு செய்து பணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி சிறந்த நுாலை எழுதிய நுாலாசிரியர்கள், நுாலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு பரிசுத் தொகை, சான்றிதழ் அளிக்கப்படுகின்றன.
2022ம் ஆண்டிற்கான சிறந்த நுால்களை தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இதில் புதுச்சேரி எழுத்தாளர் பாரதி வசந்தன் எழுதிய 'பெரிய வாய்க்கா தெரு' என்ற சிறுகதை தொகுப்பு நுாலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் தனித்தன்மை மிக்க கலாசார நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கும் 25 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பினை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டது.
இன்று 11ம் தேதி மாலை 4:00 மணியளவில், சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரம் பசுமை சாலையில் உள்ள தமிழ்நாடு இசை கவின் பல்கலைக்கழகத்தில், பரிசு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வழங்குகிறார்.