ADDED : ஜூலை 23, 2024 02:28 AM
நெட்டப்பாக்கம் : மடுகரை அடுத்த ஆயர்குளம் சுயம்பு நாகமுத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதையொட்டி, காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு இளநீர், பால், தயிர், பன்னீர் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், இரவு 9.00 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.