/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு
பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு
பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு
பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : ஜூன் 02, 2024 04:52 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப்பணித் துறை மற்றும் பொலிவுறு நகர திட்டப்பணிகளை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் நடந்து வரும் பல்வேறு பணிகளை, தலைமை பொறியாளர் தீனதயாளன் ஆய்வு செய்து வருகிறார். உப்பளம் மேல்நிலை நீர்த்தேக்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, தண்ணீரை கிருமி நீக்கிப் பயன்படுத்தும் அமைப்பான, எலக்ட்ரோ குளோரி நேஷன் அமைப்பை பார்வையிட்டார். இந்த அமைப்பை மற்ற நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் விரிவுபடுத்தி குடிநீர் வழங்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து, உப்பளத்தில் அம்பேத்கர் சாலையை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் சென்று ஆய்வு செய்து, சாலையின் தரத்தை மூன்றாவது நபர் மூலம் சோதித்து அறிக்கை அளிக்கவும், சாலைப் பணிகளை தரத்தோடு அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திப்புராயப்பேட்டையில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள், குருசுக்குப்பத்தில் முதன்மை கழிவுநீரேற்று நிலைய பணிகள் மற்றும் நீர் பரிசோதனைக் கூடத்தை பார்வையிட்டு தண்ணீரை பரிசோதிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, அதிக பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தினார். மங்கலட்சுமி நகர் வாய்க்கால் பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அதேபோல, பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்து, சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படும் சாத்தியக் கூறுகள் குறித்தும், நிபுணர்களுடன் மணமேடு பிள்ளையார்க்குப்பம் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜ், உமாபதி, சுந்தரமூர்த்தி, ராதாகிருஷ்ணன், வாசு, பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர்கள் வைத்தியநாதன், செல்வராசு, லுாயிப்பிரகாசம் உட்பட பலர் உடன் இருந்தனர்.