/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பால் கறவை இயந்திரம் பயனாளிகளுக்கு வழங்கல் பால் கறவை இயந்திரம் பயனாளிகளுக்கு வழங்கல்
பால் கறவை இயந்திரம் பயனாளிகளுக்கு வழங்கல்
பால் கறவை இயந்திரம் பயனாளிகளுக்கு வழங்கல்
பால் கறவை இயந்திரம் பயனாளிகளுக்கு வழங்கல்
ADDED : ஜூலை 21, 2024 05:51 AM

திருபுவனை: திருபுவனை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., பால் கறவை இயந்திரம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையின் திருபுவனை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பால் கறவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டு கால்நடை மருந்தகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு 100 சதவீத மானியத்தில் ஒரு பால் கறவை இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு பால் கறவை இயந்திரங்களை வழங்கினார்.கால்நடை மருத்துவர்கள் கதிரேசன், செங்கேணி, ஊழியர்கள் ராஜவேல், பச்சையப்பன், கஜபதி மற்றும் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.