/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் கோடை விழா: கலைஞர்கள் கவுரவிப்பு புதுச்சேரியில் கோடை விழா: கலைஞர்கள் கவுரவிப்பு
புதுச்சேரியில் கோடை விழா: கலைஞர்கள் கவுரவிப்பு
புதுச்சேரியில் கோடை விழா: கலைஞர்கள் கவுரவிப்பு
புதுச்சேரியில் கோடை விழா: கலைஞர்கள் கவுரவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 05:33 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த கோடை விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி, கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து, கோடை விழா புதுச்சேரியில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த கோடை விழா, புதுச்சேரி, கடற்கரை சாலை காந்தி திடல், மணவெளி மந்தைவெளி திடல், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் இரண்டு நாட்கள் நடந்தது.
இவ்விழாவில், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், கிராமிய இசை, சிவத்தான்டவம், நாடகம் ஆகிய பாரம்பரிய நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நிகழ்த்தினர். அதன் நிறைவு விழா, கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தி, கலைஞர்களை பாராட்டி கவுரவித்தனர்.
இயக்குநர் கலியபெருமாள் கூறுகையில், கோடை விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கொண்டு செல்லும் வகையிலும், கலைஞர்களை திறமைகளை ஊக்குவிப்பதற்கான கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரு வதாக அவர் தெரிவித்தார்.