/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் பெட்டியில் திடீர் புகை காவல் நிலையத்தில் பரபரப்பு மின் பெட்டியில் திடீர் புகை காவல் நிலையத்தில் பரபரப்பு
மின் பெட்டியில் திடீர் புகை காவல் நிலையத்தில் பரபரப்பு
மின் பெட்டியில் திடீர் புகை காவல் நிலையத்தில் பரபரப்பு
மின் பெட்டியில் திடீர் புகை காவல் நிலையத்தில் பரபரப்பு
ADDED : ஜூலை 13, 2024 05:51 AM
புதுச்சேரி: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மூலக்குளத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. ஸ்டேஷன் எதிரே இருந்த மின் கம்பியில் இருந்து நேற்று மதியம் 1:00 மணிக்கு திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி கொட்டியது. அதன் பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் இருந்து புகை ஏற்பட்டது. அங்கிருந்து போலீசார் அருகில் கிடந்த மணல் எடுத்து வந்து, மின் இணைப்பு பெட்டியில் கொட்டி புகை மூட்டத்தை கட்டுப்படுத்தினர்.புதிய போலீஸ் நிலையத்தில் மின் இணைப்பு பெட்டியில் இருந்து புகை வந்ததால், பரபரப்பை ஏற்படுத்தியது.