ADDED : ஜூலை 15, 2024 11:33 PM
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தின விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜான் போஸ்கோ தொகுத்து வழங்கினார். விழாவில், காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், மாணவர்களுக்கு இடையே ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.