ADDED : ஜூலை 12, 2024 05:47 AM

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது.
புதுச்சேரி கூடைப்பந்து கழகம், மேஜிக் கூடைபந்து சங்கம், ரவுண்ட் டேபுள் 104 அமைப்பு ஆகியவை சார்பில் நடக்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ரவுண்ட் டேபுள் 104 அமைப்பின் தலைவர் விக்னேஷ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி கூடைபந்து கழக செயலாளர் ரகோத்தமன், மேஜிக் கூடைபந்து சங்க செயலாளர் அமீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று துவங்கிய போட்டி வரும் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில், புதுச்சேரியின் பல்வேறு பகுதியை சேர்ந்த 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.