ADDED : ஜூன் 30, 2024 05:24 AM

அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அடுத்த நாணமேடு சுவர்ண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
தவளக்குப்பம் அருகே உள்ள நாணமேடு பகுதியில் சுவர்ண பைரவர் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு பூஜைகள், யாகம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தேய்பிறை அஷ்டமியில், மாலை 5:00 மணியளவில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.