Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்தில்  நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்தில்  நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்தில்  நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்தில்  நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

ADDED : ஜூன் 20, 2024 09:11 PM


Google News
புதுச்சேரி: அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை 22ம் தேதி நடக்கின்றது.

இது குறித்து புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாளை 22ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் பிரபல ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு நிரந்தர பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் செட்டித் தெரு எண்-28 இல் உள்ள நவயுகா கன்சல்டன்சி நிறுவனத்தில் இந்த வேலைவாய்ப்பு நடக்கின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில்,50க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஐ.டி.ஐ.,பி.டெக்.,மெக்கானிக்கல் எலெக்ட்ரீக்கல்,மேல்நிலை பட்ட படிப்பு முடித்வர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

18 வயது முதல் 35 வயது நிரம்பிய அனுபவம் பெற்ற மற்றும் அனுபவம் இல்லாத மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் ரெஸ்யூம்,கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us