/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குருவிநத்தம் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி குருவிநத்தம் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி
குருவிநத்தம் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி
குருவிநத்தம் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி
குருவிநத்தம் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூன் 03, 2024 05:23 AM

பாகூர் : அரபிந்தோ சொசைட்டி ஸ்வர்னிம் புதுச்சேரி சார்பில், குருவிநத்தம் கிராமத்தில், 'வைகறை 24' எனும் தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
குருவிநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 30ம் தேதி துவங்கிய பயிற்சி முகாம் ஜூன் 1ம் தேதி வரை நடந்தது. இதில், ஸ்வர்னிம் புதுச்சேரி குழு ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இளைஞர்களுக்கான உடல் மற்றும் மன ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் செய்முறை பயிற்சி மூலம் பயிற்று விக்கப்பட்டது.
இதேபோல், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆகாய தாமரை தண்டினைப் பயன்படுத்தி அழகிய கைவினைப் பொருட்கள், பனை ஓலையில் பல விதமான அலங்காரப் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை ஸ்வர்னிம் புதுச்சேரி இயக்குனர் ரகுநாத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். அரொபிந்தோ சொசைட்டி ஜாய் நன்றி கூறினார்.