/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2024 04:22 AM
புதுச்சேரி, : கால தாமதமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு, கால தாமதமாக விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பதும், மாணவர்கள் தர வரிசைப்பட்டியலை மாலையில் வெளியிட்டு அன்று இரவே மாணவர் சேர்க்கை ஆணை வழங்குவதால் பல முறைகேடுகள் நடக்கின்றன.
இதுபோன்ற நிலை மாற, மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டு ஆட்சேபனை பெறப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
மருத்துவம் படிக்க சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் விவரங்கள், அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் கல்வி நிதியுதவி இந்த ஆண்டு உண்டா, கடந்தாண்டு கவர்னர், முடிவு எடுத்து பரிந்துரைத்தது போன்று புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு இந்த ஆண்டு, 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுமா, கல்வி கட்டண உயர்வு உண்டா?
இந்தாண்டு மருத்துவ கலந்தாய்வு சென்டாக் மூலம் நடைபெறுமா? மத்திய அரசின் எம்.சி.சி., யின் மூலம் கலந்தாய்வு நடைபெறுமா என்பதையும் தெளிவுப்படுத்தி, இட ஒதுக்கீட்டு இடங்கள், கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக வெளியிட்டு காலதாமதமின்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.