/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 11ல் செடல் திருவிழா துவக்கம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 11ல் செடல் திருவிழா துவக்கம்
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 11ல் செடல் திருவிழா துவக்கம்
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 11ல் செடல் திருவிழா துவக்கம்
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 11ல் செடல் திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 03, 2024 02:56 AM
புதுச்சேரி : புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் செடல், தேர் திருவிழா வரும் 11ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி, நயினார் மண்டபம், நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலில், 41,வது ஆண்டு செடல் விழா வரும், 11ம் தேதி துவங்குகிறது. இதனையொட்டி வரும், 15ம், தேதி காலை 9:00 மணிக்கு, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து,108 பால் குட ஊர்வலம் நடக்கிறது. மேலும், 17,ம் தேதி காலை 9:30 மணிக்கு இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து, 108 முளைப்பாரி ஊர்வலமாக புறப்பட்டு முத்து மாரியம்மன், நாக முத்துமாரியம்மன் கோவில்களுக்கு சென்று, மரப்பாலம் திருக்குளத்தில் கரைக்கப்படும்.
வரும், 19ம், தேதி மாலை 4:30 மணிக்கு, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, பூங்கரகத்தோடு பக்தர்கள் அலகு அணிவித்து , வாகனம் இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து,செடல் ஊர்வலம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேர் திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவை முதல்வர் ரங்கசாமி, சம்பத் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை செயலர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.
வரும், 20,ம் தேதி, நாகமுத்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதையடுத்து,ஆக.,2ம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.