/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலில் மூழ்கி பள்ளி மாணவி பலி; காப்பாற்றிய இருவர் மீது தாக்குதல் கடலில் மூழ்கி பள்ளி மாணவி பலி; காப்பாற்றிய இருவர் மீது தாக்குதல்
கடலில் மூழ்கி பள்ளி மாணவி பலி; காப்பாற்றிய இருவர் மீது தாக்குதல்
கடலில் மூழ்கி பள்ளி மாணவி பலி; காப்பாற்றிய இருவர் மீது தாக்குதல்
கடலில் மூழ்கி பள்ளி மாணவி பலி; காப்பாற்றிய இருவர் மீது தாக்குதல்
ADDED : மார் 13, 2025 12:41 AM

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே கடலில் மூழ்கிய, பள்ளி மாணவி இறந்தார். மீட்டு சென்ற இருவரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் பிரின்சி,17; குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர் நேற்று, தனது தாத்தா கல்யாணசுந்தரத்துடன், புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் கடற்கரைக்கு மாசிமக விழாவிற்கு வந்தார். அங்கு கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மாணவியை, அங்கிருந்த மீனவர்கள் மீட்டனர்.
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், திவாகர் ஆகியோர் பைக்கில் பிரின்சியை, திருச்சோபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். வழியில், கம்பளிமேட்டை சேர்ந்த 10 பேர், பைக்கிற்கு வழிவிடாமல் சென்றனர். இதை தட்டிக்கேட்ட, ஸ்டீபன்ராஜ் மற்றும் திவாகரை தாக்கினர்.
இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரின்சியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த பொதுமக்கள், கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மறியலால், கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.