/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா
போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா
போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா
போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூன் 05, 2024 10:55 PM

திருக்கனுார: திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் பல்வேறு வகையான பயன்தரக் கூடிய மரக்கன்றுகளை நட்டார்.
இதில் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, துரைக்கண்ணு மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, திருக்கனுார் போலீஸ் சார்பில் வாதானுார், திருக்கனுார் புறவழிச் சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.