ADDED : ஜூலை 09, 2024 11:42 PM
புதுச்சேரி : மணவெளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பள்ளி துணை முதுல்வர் விஜயா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளியில் வன மகோற்சவ வார விழாவை முன்னிட்டு வனத்துறை ஊழியர்கள் வழங்கிய வில்வம், இலவம், கொன்றை, நெல்லி உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடட்பட்டது. நிகழ்ச்சியில் இயற்பியல் விரிவுரையாளர் கார்த்திக்கேயன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.