/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; ஆலை நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு புதுச்சேரியில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; ஆலை நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு
புதுச்சேரியில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; ஆலை நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு
புதுச்சேரியில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; ஆலை நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு
புதுச்சேரியில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; ஆலை நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு
ADDED : ஜூன் 19, 2024 01:29 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பறிமுதல் செய்த 6 டன் சந்தன மரக்கட்டை குறித்து ஆலை நிர்வாகம் சமர்பித்துள்ள ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
புதுச்சேரி உளவாய்க்கால் கிராமத்தில், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகள் பிரேமாவிற்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த 'இந்தோ அப்ரோ எஸசன்ஷியல் ஆயில் (பி) லிமிடெட்' என்ற சந்தன ஆயில் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழக வனத்துறையினர் சோதனையிட்டனர்.
அதில், ஆவணமின்றி பதுக்கி வைத்திருந்த 6 டன் சந்தனை மரக்கட்டைகள மற்றும் சந்தன மரத்துாள் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, மகாராஷ்டிராவில் உள்ள அந்நிறுவனத்தின் இயக் குநருக்கு, தமிழக வனச்சட்டம் 49 பி கீழ் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, தமிழக வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புலாரி சார்பில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நயன் என்பவர் நேற்று மதியம் சேலம் வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டை தொடர்பான ஆவணங்கள் எனக் கூறி சீல் வைத்த கவரை சமர்பித்துள்ளார். அந்த ஆவணங்கள் உண்மையா என்பது குறித்து ஓரிரு நாளில் வனத்துறையினர் ஆய்வு நடத்த உள்ளனர்.