/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ. 50 கோடி கோவில் நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி ரூ. 50 கோடி கோவில் நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி
ரூ. 50 கோடி கோவில் நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி
ரூ. 50 கோடி கோவில் நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி
ரூ. 50 கோடி கோவில் நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி
ADDED : ஜூலை 11, 2024 04:23 AM
புதுச்சேரி, : 'பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலத்தை மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது' என, புதுச்சேரி பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
லாஸ்பேட்டை தொகுதி பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கொள்ளிமேடு மைதானம் கடந்த 50 ஆண்டுகளாக பல பிரச்னையான இடமாக உள்ளது. இந்த மைதானத்தை அரசியல் பிரமுகர்களின் துணையோடு மனைகளாக விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
அந்த இடம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சித்தி விநாயகர் சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் பராமரிப்பில் இருந்து வருகிறது. மனைகளாக பிரிக்கப்பட உள்ளது குறித்து முன்னாள் கவர்னர் மற்றும் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
அப்போதைய கவர்னர் நேரடியாக கோவில் இடத்தை பார்வையிட்டு, விரைவில் அரசு உடமையாக்கப்பட்டு பெத்துசெட்டிப்பேட்டை, சாந்தி நகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், செல்லபெருமாள்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு மையம், பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார்.
சித்திவிநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே, அரசு நேரடியாக தலையிட்டு ரூ. 50 கோடி மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்க வேண்டும். மீறினால் பொதுமக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.