ADDED : ஜூன் 01, 2024 04:28 AM

புதுச்சேரி : செட்டிப்பட்டு- கொடுக்கூர் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் இருந்து தமிழகப் பகுதியான கொடுக்கூர் வழியாக திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், மயிலம் முருகன் கோவில், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றன.
மேலும், கொடுக்கூர் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக செட்டிப்பட்டு, சித்தலம்பட்டு வழியாக திருக்கனுார் பஜார் வீதிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், செட்டிப்பட்டில் இருந்து கொடுக்கூர் செல்லும் சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள செட்டிப்பட்டு - கொடுக்கூர் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.