/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன்பிடி தடைக்கால நிவாரணம் அரசுக்கு கோரிக்கை மீன்பிடி தடைக்கால நிவாரணம் அரசுக்கு கோரிக்கை
மீன்பிடி தடைக்கால நிவாரணம் அரசுக்கு கோரிக்கை
மீன்பிடி தடைக்கால நிவாரணம் அரசுக்கு கோரிக்கை
மீன்பிடி தடைக்கால நிவாரணம் அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2024 05:25 AM
புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளது.
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு;,
கடலில் மீன் வளத்தை பாதுகாக்க ஆண்டு தோறும், ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. இந்த காலத்தில் மீனவர்களுக்கு வருமானம் இருக்காது, அதனால், தடைக்காலங்களில் அரசு நிவாரணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயை மே முதல் வாரத்தில் அரசுவழங்கி வந்தது.
ஆனால் இந்த ஆண்டு, மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், இதுவரை மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. காலதாமதமின்றி நிவாரண தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.