/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
ADDED : ஜூலை 24, 2024 07:01 AM

புதுச்சேரி : மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐ.டி.ஐ., நலச்சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் வினோத் மற்றும் சங்க நிர்வாகிகள் செல்வம், பிரபு, சங்கர், பாலச்சந்தர், குமரன் உள்ளிட்டோர் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் தலைமையில் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
அப்போது, மின்துறை தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து போராடிய மின்துறை ஊழியர்கள் 11 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2 ஆண்டு கடந்த பின்பும் 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனை நடப்பு கூட்ட தொடரில் ரத்து செய்ய மனு அளித்தனர்.
அத்துடன், மின்துறையில் காலி உள்ள 180 கட்டுமான உதவியாளர் பணியிடத்தால் இரட்டிப்பு பணி சுமை ஏற்பட்டு அடிக்கடி மின் விபத்து ஏற்படுகிறது. கட்டுமான உதவியாளர் பணி நிரப்பும் கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஊழியர்கள் மீதான வழக்கு ரத்து மற்றும் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.